அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
#BigBreaking: 14 மாவட்டத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு வெளுத்து வாங்கப்போகும் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் பல இடங்களில் மிதமான மழைக்கு இருப்பதாகவும், 7 மற்றும் 8 ம் தேதியில் பல மாவட்டங்களில் கனமழைக்கு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
உள்மாவட்டங்களில் நிலவும் வெப்பம் காரணமாக வெப்ப அலை வீசினாலும், தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இரவு 0 மணிவரையில் இடி-மின்னலுடன் கீழ்காணும் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஈரோடு, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பட்டுள்ளது.