அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
இயற்கை உபாதைக்கு சென்ற மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்.!! 25 வயது வாலிபரின் வெறி செயல்.!!
சிவகாசி அருகே 70 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக 25 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகாசி அருகே வடமலாபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் லட்சுமி. 70 வயதான இவர் நேற்று இரவு இயற்கை உபாதையை கழிப்பதற்காக அருகிலுள்ள ஆள் நடமாட்டம் இல்லாத முட்புதருக்கு சென்று இருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் லட்சுமி வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரை பல இடங்களிலும் தேடி இருக்கின்றனர். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள முட்புதர் ஒன்றில் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் லட்சுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கொடூரம்... மின்வாரிய ஊழியர் படுகொலை.!! தாயுடன் சேர்ந்து 20 வயது இளைஞன் வெறி செயல்.!!
காவல்துறையின் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த காசி மாயன் என்ற 25 வயது இளைஞர் மூதாட்டி லட்சுமியை படுகொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இயற்கை உபாதையை கழிப்பதற்காக வந்த லட்சுமியை பலாத்காரம் செய்ய முயன்று இருக்கிறார் காசி மாயன். அப்போது மூதாட்டி லட்சுமி சத்தம் போட முயன்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து கயிறால் அவரது கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்திருக்கிறார் காசிமாயன். இவர் மீது பல வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கள்ளச்சாராய் விவகாரத்தில் திமுகவுக்கு தொடர்பு.? ஆதாரங்களுடன் ஆளுநரை சந்தித்த அண்ணாமலை.!!