அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
அதிகாலையில் கேட்ட பயங்கர சத்தம்.! மூன்று வாகனங்கள் அடுத்தடுத்ததாக மோதி கோர விபத்து!!
செங்கல்பட்டு அருகே லாரி, ஆம்னி பேருந்து, அரசு பேருந்து என அடுத்தடுத்ததாக மூன்று வாகனங்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு அருகே பழமத்தூர் பகுதியில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்தில் கிரானைட் கற்களை ஏற்றுக் கொண்டு சென்னை பூந்தமல்லிக்கு சென்ற லாரி ஒன்று பழுதாகி நின்றுள்ளது.
செங்கல்பட்டில் கோரவிபத்து
இந்நிலையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்தக் கோர விபத்தில் பஸ்ஸின் முன்பக்கம் நொறுங்கியது. மேலும் ஆம்னி பஸ்சில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து விபத்தில் சிக்கி நின்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்தின் பின்பக்கம் அரசு பேருந்து ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்துகளில் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: இரண்டு பேருந்துக்கு நடுவே சிக்கி இளைஞர் பரிதாப பலி; போதை ஓட்டுனரால் நடந்த சோகம்.. கோவையில் துயரம்.!
பரிதாபமாக பறிபோன 4 உயிர்கள்
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பயங்கர விபத்து காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இந்த கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இதையும் படிங்க: கூகுள் மேப்பை பார்த்து, 7 பேரின் உயிரோடு விளையாடிய பெண்.! சென்னையில் விபரீதம்.!