மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்றுவரை என்னிடம் ஜெய்ஹிந்த் என மக்கள் முழங்குகிறார்கள் - மனம்திறந்த அர்ஜுன்.!
அக்.19ம் தேதி வெளியான லியோ திரைப்படம் வரவேற்பு, வசூல் ரீதியாக மாபெரும் சாதனை புரிந்ததைத்தொடர்ந்து, இன்று படத்தின் வெற்றிவிழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றது.
அப்போது, ஆக்சன் கிங் அர்ஜுன் பேசுகையில், "விஜய் சூப்பர் ஹீரோ, லோகேஷ் சூப்பர் இயக்குனர். இவர்களின் அணி எப்போதும் வெற்றிதான். நான் நடிகை திரிஷாவுடன் மங்காத்தாவில் பணியாற்றியுள்ளேன்.
அதனைத்தொடர்ந்து, லியோ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், எங்கள் இருவருக்கும் இரண்டு படத்திலும் ஒன்றாக சேர்ந்து நடிக்க வாய்ப்புகள், ஒரு காட்சிகள் கூட கிடைக்கவில்லை.
மக்கள் இன்றளவிலும் என்னை பார்த்து ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை தெறிக்கவிடுகின்றனர். அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. விஜயின் பலம் என்பது அவரின் மௌனத்தில் இருக்கிறது.
அவர் கவனமுடன் கேட்டு செயல்படுவார். எப்போதாவது மட்டுமே பதிலுக்கு பதில் என எதிர்வினையுடன் செயல்படுவார். தலைவரின் குணத்தை கொண்டவர், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவார் என நம்புகிறேன். இதனை நான் மேடைக்கருத்தாக சொல்லவில்லை, மக்களுக்கு நல்ல விஷயங்களை உண்மையில் செய்ய வேண்டும் என அவர் விரும்புகிறார்" என பேசினார்.
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், நடிகர்கள் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், ஜியார்ஜ் மரியான், கெளதம் வாசுதேவ் மேனன் உட்பட பலரும் படத்தில் நடித்திருந்தனர். அனிரூத் இசையமைத்து இருக்கிறார்.