மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"வேணா சார் விட்டுடுங்க." கெஞ்சிய பெண்.! பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூல் சுரேஷ் கேவலச்செயல்.!
தமிழ் திரையுலகில் வில்லனாகவும், காமெடி நடிகனாகவும் நடித்து வருபவர் கூல் சுரேஷ். காக்க காக்க, சாக்லேட், ஆயுத எழுத்து, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனது பெயரை நிலைநிறுத்தி இருக்கிறார்.
இதன் பின்பு சரியான சினிமா வாய்ப்பு இல்லாமல் திரையுலகிலிருந்து சிறிது இடைவேளை எடுத்துக்கொண்டார் கூல் சுரேஷ். மேலும், சிம்புவின் நண்பன் மற்றும் தீவிர ரசிகனான இவர் கடந்த ஆண்டு வெளியான சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் புரமோஷனில் ஈடுபட்டார்.
மேலும், இவர் "வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு வணக்கத்தை போடு" என்று டயலாக்கை வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பல யு டியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்தார். கூல் சுரேஷ் படங்களில் நடித்து பிரபலமானரோ இல்லையோ வெந்து தணிந்தது காடு பட புரமோசனை வைத்து மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.
மோகன் ஜி இயக்கிய பகாசூரன் படம் இன்று வெளியான நிலையில் படத்தை பார்த்து வெளியே வந்த கூல் சுரேஷ் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்தினை பார்த்து விட்டு வெளியே வந்த இளம் பெண்ணிடம் முத்தம் தருமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். அந்த இளம் பெண் வேண்டாம் சார் விட்டுருங்க என்று கெஞ்சியுள்ளார். இது வீடியோவாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. கூல் சுரேஷின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.