திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகர் ஜெயம் ரவி - கீர்த்தி ஷெட்டி நடிக்கும் படத்தின் முதற்பார்வை நாளை வெளியீடு; படக்குழு அறிவிப்பு.!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ஜெயம்ரவி, சோழர்களின் வரலாற்றை மையமாக கொண்ட பொன்னியின் செல்வன் படத்தில் அடித்து பெரும்புகழ் பெற்றார். அதனைத்தொடர்ந்து, அவர் நடித்து வெளியாகும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்து இருக்கிறது.
அர்ஜுனன் ஜேஆர் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெனி (Genie). இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து வழங்குகிறார். படத்தில் ஜெயம்ரவி, கீர்த்தி செட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர் ரஹ்மான் இசையில், பிரதீப் ராகவ் எடிட்டிங்கில் உருவாகியுள்ள இப்படம், விரைவில் திரைக்கு வருகிறது. தற்போது படக்குழு நாளை மதியம் 2 மணியளவில் முதற்பார்வையை வெளியிடுவதாக அறிவித்து இருக்கிறது.