#JustIN: தமிழ்நாடு பட்ஜெட் 2025 எப்படி? நான்கு வரிகளில் முடித்த அண்ணாமலை.! என்ன சொன்னார் தெரியுமா? 



Annamalai on TN Budget 2025 

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 - 2026 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல், இன்று நடைபெற்றது. சட்டப்பேரவை அறிவிப்புகளை மக்கள் தெரிந்துகொள்ள மொத்தமாக 932 இடங்களில், சிறப்பு காணொளி நேரடி ஒளிபரப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று பல்வேறு புதிய திட்டங்களும் மக்களுக்காக அறிவிக்கப்பட்டன. 

இந்நிலையில், பட்ஜெட் மீது பலரும் தங்களின் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, நடப்பு பட்ஜெட் மக்களுக்கு தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் இருக்கிறது என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: TN Budget 2025: டைடல் பார்க், புதிய தொழிற்சாலை.. 26000 பேருக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு.!

இதுதொடர்பான அவரின் எக்ஸ் வலைப்பதிவில், "இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது. 

தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது. ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது. திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது  திமுக" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: TN Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட் 2025: திருநங்கைகளின் முன்னேற்றத்துக்காக அசத்தல் அறிவிப்பு.. விபரம் இதோ.!