TN Budget 2025: டைடல் பார்க், புதிய தொழிற்சாலை.. 26000 பேருக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு.!



TN Budget 2025 for Interior Company Development 

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 - 2026 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல், இன்று நடைபெற்றது. சட்டப்பேரவை அறிவிப்புகளை மக்கள் தெரிந்துகொள்ள மொத்தமாக 932 இடங்களில், சிறப்பு காணொளி நேரடி ஒளிபரப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று பல்வேறு புதிய திட்டங்களும் மக்களுக்காக அறிவிக்கப்பட்டன. இந்த திட்டங்கள் வரும் காலத்தில் செயல்படுத்தப்படும்.

தொழில்துறை வளர்ச்சிக்கும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் 2025 - 2026 பட்ஜெட்டில் சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வெளியாகிய அறிவிப்புகள் பின்வருமாறு.,

இதையும் படிங்க: TN Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட் 2025: திருநங்கைகளின் முன்னேற்றத்துக்காக அசத்தல் அறிவிப்பு.. விபரம் இதோ.!

  1. செமிகண்டக்டர் உற்பத்தி, திறன் வளர்ச்சிக்கு ரூ500 கோடி ஒதுக்கீடு.
  2. ஓசூரில் டைடல் பார்க் ரூ.400 கோடி ஒதுக்கீடு.
  3. விருதுநகரில் மின் டைடல் பார்க் - 6000 பேருக்கு வேலைவாப்பு கிடைக்கும்.
  4. மதுரை, கடலூர் மாவட்டத்தில் புதிய காலணி தொழிற்பூங்கா ரூ.250 கோடி செலவில் அமைக்கப்படும். இதனால் 20000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  5. தொழில் ஊக்குவிப்புத்துறை வளர்ச்சிக்கு ரூ.3915 கோடி ஒதுக்கீடு. 
  6. சிறுகுறு நிறுவனத்திற்கு ரூ.1918 கோடி ஒதுக்கீடு.

இதையும் படிங்க: TN Budget 2025: கலைஞர் உரிமை தொகை ரூ.1000 - வெளியானது புதிய அறிவிப்பு.!