TN Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட் 2025: ஆர்ஆர்டிஎஸ் இரயில் சேவை... அரசு அறிவிப்பு.!



TN Budget 2025 RRTS Rail System 

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 - 2026 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல், இன்று நடைபெற்றது. சட்டப்பேரவை அறிவிப்புகளை மக்கள் தெரிந்துகொள்ள மொத்தமாக 932 இடங்களில், சிறப்பு காணொளி நேரடி ஒளிபரப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று பல்வேறு புதிய திட்டங்களும் மக்களுக்காக அறிவிக்கப்பட்டன. 

இந்நிலையில், பட்ஜெட்டில் அதிவிரைவு இரயில் சேவை தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கோவை மாநகரங்களில் பிராந்திய விரைவு போக்குவரத்து (Regional Rapid Transit System) சேவை தொடங்க ஆலோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிவிரைவு இரயில் சேவை டெல்லி - மீரட் இடையே செயல்படுத்தப்பட்டுள்ளதைப்போல, தமிழ்நாட்டிலும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #JustIN: தமிழ்நாடு பட்ஜெட் 2025 எப்படி? நான்கு வரிகளில் முடித்த அண்ணாமலை.! என்ன சொன்னார் தெரியுமா? 

  1. சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் - விழுப்புரம் நகரங்களை இணைத்து 167 கிமீ தூரம் கொண்ட முதல் வழித்தட சேவை.
  2. சென்னை - காஞ்சிபுரம் - வேலூர் நகரங்களை இணைத்து 140 கிமீ தூரம் கொண்ட இரண்டாவது வழித்தட சேவை.
  3. கோயம்புத்தூர் - திருப்பூர் - ஈரோடு - சேலம் நகரங்கை இணைத்து 185 கிமீ தூரம் கொண்ட மூன்றாவது வழித்தட சேவைக்கு தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. இந்த திட்டங்களை தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் பரிந்துரைத்து, அதிகாரிகள் ஆய்வுக்கு பின்னர் அதன் திட்டடங்கள் முன்னெடுக்கப்படும்.

இதையும் படிங்க: TN Budget 2025: டைடல் பார்க், புதிய தொழிற்சாலை.. 26000 பேருக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு.!