மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: நடிகர் விஜய் ஆண்டனியின் 17 வயது மகள் தற்கொலை: கதறிய குடும்பம்.. திரையுலகமே அதிர்ச்சி.!
தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராகவும், முன்னணி நடிகராகவும் இருந்து வருபவர் விஜய் ஆண்டனி. இவர் திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் நாட்களில் கிடைத்த பட வாய்ப்புகளை பயன்படுத்தி தற்போது முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
நான் திரைப்படம் மூலமாக இவர் தன்னை நாயகனாக அறிமுகம் செய்து, தற்போது வரை பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்.
சென்னையில் குடும்பத்துடன் வசித்து வரும் விஜய் ஆண்டனிக்கு லாரா என்ற 17 வயதுடைய மகள் இருக்கிறார்.
இந்நிலையில், இன்று அதிகாலை தனது வீட்டில் உள்ள அறையில் லாரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகளை பார்க்கச் சென்ற விஜய் ஆண்டனி அவர் தனது அறையில் சடலமாக தொங்குவதைக் கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி அலறியுள்ளார்.
இதனை கேட்டு வந்த குடும்பத்தினரும் கண்ணீரில் தவிக்க, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் லாராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
லாராவின் தற்கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.