மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீண்ட நாட்களுக்கு பின் விஜய் ஆண்டனி முகத்தில் சிரிப்பு; வெளியானது வள்ளி மயில் போஸ்டர்.!
தாய் சரவணனின் நல்லு பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சுசீந்திரனின் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் வள்ளி மயில் (Valli Mayil). இப்படத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, பாரதி ராஜா, சத்யராஜ், பகத் பாசில், சுனில், ரெடின் கிங்ஸ்லி, தம்பி ராமையா, மனிஷா யாதவ், அறந்தாங்கி நிஷா உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.
படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து இருக்கிறார். சமீபத்தில் படத்தின் டிரைலர் காட்சிகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், படக்குழு சார்பில் இன்று புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் நடிகர் விஜய் ஆண்டனி சிரித்தபடி இருக்கிறார்.
தனது மகளின் மரணம், மூத்த நடிகர் விஜயகாந்தின் மறைவு என அடுத்தடுத்த பல உலுக்கத்தின் காரணமாக நிலைகுலைந்துபோன விஜய் ஆண்டனி, தனது மனதின் வலிகளை அறிக்கையாக வெளியிட்டு வந்தார்.
New year wishes from team #ValliMayil 😊✨ pic.twitter.com/tAgBKI8WIG
— vijayantony (@vijayantony) January 1, 2024
சமீபத்தில் ஹிட்லர் படத்தின் போஸ்டர்களில் அவர் சிரித்தபடி எந்த காட்சியும் பதிவாகவில்லை. சூழ்நிலையும் அமையவில்லை. ஆனால், வள்ளி மயில் படக்குழு தற்போது விஜய் ஆண்டனி சிரித்தவாறு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது.
இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட நாட்களாக உருக்கமான மனதுடன் இருந்த விஜய் ஆண்டனியை, தற்போதுதான் சிரித்த முகத்துடன் பார்க்க முடிந்துள்ளளது. அவர் சிரித்தால் அழகுற அவரின் முகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மரணம் என்பது மனித வாழ்க்கையில் இயல்பானது, அதனை மனதளவில் ஏற்றுக்கொண்டு மேற்படி வாழ்க்கையை தொடங்குவதே இயற்கையின் பாதையில் நம்மை அழைத்துச்செல்லும். அதை ஏற்றுக்கொள்ள சில காலம் ஆகும்தான்.