திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
நான் ஏன் ரஜினி உடன் நடிக்கிறேன் - ரகசியத்தை வெளியிட்டார் விஜய் சேதுபதி!

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் சீனு ராமசாமி இயக்கத்தில் 'தென்மேற்குப் பருவக்காற்று' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்தத் திரைப்படம் தேசிய விருது பெற்றது. மேலும் இதனைத் தொடர்ந்து, அவர் நடித்த பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்று ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பையும் பெற்றுத்தந்தது.
இவரது, எதார்த்தமான நடிப்பில் வெளிவந்த பீட்ஸா, சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில்
நீங்க இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தாலும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் திரைப்படம் வித்தியாசமான வரவேற்பைப் பெற்றது. கடந்த ஆண்டு இவர் மாதவனுடன் இணைந்து நடித்த விக்ரம்வேதா திரைப்படம் மிகவம் பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க இருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இதற்கு முன் இயக்கிய பீட்சா, ஜிகர்தண்டா மற்றும் இறைவி ஆகிய மூன்று படங்களிலும் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.
இந்நிலையில், விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்த பேட்டியில், இப்படத்தில் நடிக்க கார்த்திக் சுப்புராஜுக்காக ஒப்புக்கொண்டேன். அது மட்டுமில்லாமல், ரஜினிகாந்த் 40 வருடங்களுக்கும் மேல் ரசிகர்களின் ரசனையை புரிந்து கொண்டு நடித்து வருவது, சாதாரண விஷயம் இல்லை என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சினிமாவில் ரசிகர்களுக்கு எப்படி பேசினால், நடித்தால், நின்றால், வசனத்தை உச்சரித்தால் பிடிக்கும். என அனைத்து விதமான விஷயங்களையும் தெரிந்து கொண்டு, அவர் இத்தனை வருடங்களாக ரசிகர்களை கவர்ந்து தன் பிடியில் வைத்திருக்கிறார் என்பதை, கவனிக்கவே இந்த படத்தில் நடிக்கிறேன். மேலும், கண்டிப்பாக அவருடன் நடிப்பது எனக்கு நல்ல அனுபவமாக இருக்கும் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.