திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
மீண்டும் சினிமாவிற்கு வரும் நடிகை அசின்? இணையத்தில் வெளியான கவர்ச்சி போட்டோக்கள்!
-10751.jpg)
தமிழில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அசின். தமிழில் முன்னணி நடிகையாக வளம் வந்த இவர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.
போக்கிரி, காவலன், சிவகாசி, வரலாறு என பல திரைப்பங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கஜினி திரைப்படம் மூலம் இவர் பிரபலமானார். ஹிந்தியில் ரீமேக் ஆனா கஜினி திரைப்படம் மூலம் இவருக்கு ஹிதியில் வாய்ப்புகள் கிடைத்தன.
இதற்கிடையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவுக்கும், அசினுக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் நட்பு காதலாக மாறியதையடுத்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2016-ஆம் ஆண்டுஇருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.
இவ்வாறு திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த நடிகை அசின். இனிமேல் படங்களில் நடிக்கவே மாட்டார் என்று கூறிய நிலையில் திருமணத்திற்கு பிறகு முதன் முறையாக சில தினங்களுக்கு போட்டோ ஷூட் ஒன்றில் பங்கேற்ற அவர் சில கவர்ச்சி புகைப்படங்களை எடுத்துள்ளார். அதில் சில இணையத்தில் வெளியாகியுள்ளனர்.
இதனை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் இதனால், அசின் மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.