ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
அம்மாடியோவ்.. எத்தான்தண்டி.. சுற்றுலாப்பயணிகளை மிரளவைத்த ராட்சத அனகோண்டா..!

ஹாலிவுட் திரைப்படங்களில் அனகோண்டா பாம்பை பார்த்து பழகிய நமக்கு, அனகோண்டா பாம்பின் உண்மை பின்னணி தெரிய வாய்ப்புகள் குறைவு. ஏனெனில் நாம் வாழும் இந்தியா, ஆசிய நிலப்பரப்பில் மலைவகை பாம்பு அதிகபட்சம் 20 ஆண்டுகள் வாழும் தன்மை கொண்டவை. இவை சராசரியாக 21 அடி நீளம் (6.4 மீட்டர்) நீளம் வரை வளரும் தன்மை கொண்டது ஆகும்.
ஆனால், பிரேசில் மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் மட்டும் காணப்படும் அனகோண்டா வகை மலைப்பாம்புகள், அங்குள்ள மன்வளத்துக்கு ஏற்ப பிரம்மாண்டமான அளவில் வளரக்கூடியவை. உலகில் மழையை ஏற்படுத்த மிகப்பெரிய காரணமாக இருக்கும் பிரேசில் நாட்டில் அமைந்துள்ள அமேசான் வனங்களில் வாழும் அனகோண்டா உலகளவில் மிகப்பெரியது ஆகும்.
இதையும் படிங்க: பொம்மை லாரிக்கு மண் நிரப்ப ஒரிஜினல் ஜேசிபி.. குட்டி சுட்டீஸாக மாறிய ஆபரேட்டர்.. நெகிழவைக்கும் வீடியோ.!
Is everyone accounted for?🤯 pic.twitter.com/HtVW3tnT99
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) March 14, 2025
இவை 10 முதல் 30 ஆண்டுகள் வரை வாழும் தன்மை கொண்டவை ஆகும். அதேபோல, குறைந்தது 15 அடி முதல் 30 அடி (9 மீ) நீளம் வரை சாதரணமாக வளரும் தன்மை தன்மை கொண்டவை. மேலும், 150 கிலோ எடையில் இருந்து 250 கிலோ எடையுடன் இருக்கும். இந்திய வகை மலைப்பாம்புகள் 50 முதல் 100 கிலோ எடையுடன் இருக்கும்.
அமேசான் காடுகளில் வாழும் மக்கள், அனகோண்டா பாம்புகளின் மீது வைத்துள்ள நம்பிக்கை காரணமாக, எப்போதும் விழிப்புடன் தான் இருப்பார்கள். நன்கு வளர்ந்த அனகோண்டா மனிதர்கள், காட்டு எருமை போன்ற அதிக எடை கொண்ட உயிரினங்களையும் விழுங்கும் திறன் கொண்டது.
இந்நிலையில், பிரேசில் நாட்டில் உள்ள ஜார்டிம் பகுதியில் உள்ள ஆற்றில் அனகோண்டா பாம்பு பார்க்கப்பட்டது. இதனை அங்கு சுற்றுலா சென்ற பயணிகள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இதன் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சந்துக்குள்ள இவ்வுளவு வேகம் தேவையா அண்ணாத்த? வாகனத்தை கரப்பாண்பூச்சி போல கவிழ்த்த நபர்.!