திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மிஸ் ஆகிடுச்சு.. விஜய் படத்தால் வாய்ப்பை தவறவிட்ட நடிகை.. வேதனையுடன் பேச்சு..!!
கடந்த 2019-ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இந்த படம் விஜய் ரசிகர்களிடம் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றது.
அதேபோல 2020-ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உட்பட பலரின் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவான திரைப்படம் தர்பார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மகள் கதாபாத்திரத்தில் நிவேதா தாமஸ் நடித்திருப்பார்.
இந்த நிலையில் நடிகர் விஜயுடன் பிகில் படத்தில் நடித்ததால் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு தட்டிப்போனதாக நடிகை இந்துஜா வேதனை தெரிவித்திருக்கிறார்.
அந்த சமயத்தில் தான் பிகில் படத்தில் நடித்திருந்ததாகவும், அப்போதே தர்பார் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த சூழலிலும் கால்சீட் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டதால் தர்பாரை தவறவிட்டதாக தெரிவித்துள்ளார்.