#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தண்ணீருக்கடியில் லிப்லாக்! கர்ப்பக்காலத்தில் இப்படியொரு ரொமான்டிக் போட்டோஷூட்டா! வேற லெவலில் பாக்கியலட்சுமி நடிகை!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அவ்வாறு ஒரு சாதாரண குடும்பத் தலைவியின் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்தத் தொடருக்கு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. இதில் ஹீரோயின் பாக்கியலட்சுமியின் தோழியாக, அவரது கணவர் கோபியின் முன்னாள் காதலியாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஜெனிஃபர் நடித்து வந்தார்.
ஆனால் அவர் கர்ப்பமாக இருந்த நிலையில் தொடர்ந்து நடிக்க முடியாததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாக்கியலட்சுமி தொடரிலிருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து தற்போது ராதிகா கதாபாத்திரத்தில், நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ரேஷ்மா பசுபுலேடி நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜெனிஃபர் அவ்வபோது தனது கர்ப்பக்கால புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் தண்ணீருக்கு அடியில் கணவருடன் ரொமாண்டிக் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.