மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பாலிவுட்டில் இதனால் தான் நடிக்கல.!" ஓபனாக உண்மையை உடைத்த ஜோதிகா.!
வட இந்தியாவை சொந்த ஊராகக் கொண்டிருந்தாலும் நடிகை ஜோதிகா ஏன் பாலிவுட் படங்களில் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
துறுதுறு நடிகை
கோலிவுட் சினிமாவில் 90களில் சுறுசுறுப்பான தனது நடிப்பால் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. அப்போது, நிறைய படங்களில் அஜித், விக்ரம், விஜய், சூர்யா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் அவர் சேர்ந்து நடித்து இருந்தார். அவர் நடித்த படங்களும் நன்றாக ஹிட் அடித்தன. அப்போதெல்லாம் நடிகை ஜோதிகா எப்போதும் ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படும்.
இதையும் படிங்க: எனக்கு ஒருநாள் சூர்யாவை தருவீங்களா?? ரசிகையின் கேள்விக்கு நடிகை ஜோதிகா அளித்த பதிலை பார்த்தீங்களா!!
முன்னணி நடிகருடன் காதல் திருமணம்
பின் ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட அவர் குடும்பம், குழந்தைகள் என்று செட்டில் ஆகிவிட்டு பிரேக் எடுத்தார். அதன் பின்னர், நீண்ட இடைவெளிக்கு பின் 36 வயதினிலே என்ற திரைப்படத்தில் ஜோதிகா ஒரு கௌரவ நடிகையாக நடித்திருந்தார். அதற்கு பிறகு ஹீரோயின்களை மையப்படுத்தி எடுக்கப்படும் லீட் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்த அவர் தற்போது பாலிவுட் படங்கள் பலவற்றிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
ஜோதிகாவை கைவிட்ட பாலிவுட்
அவர் முதல் முதலில் பாலிவுட்டில் தான் அறிமுகமானார். ஆனால் அங்கே நடிக்காமல் அவர் தென்னிந்திய சினிமாவில் அதிகப்படியாக நடித்து வந்தார். இது பற்றி அவரிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது, அதற்கு அவர், "ஒரு நடிகைக்கு தனது முதல் படம் ஹிட் ஆகவில்லை என்றால் அடுத்து வாய்ப்புகள் கிடைப்பது குதிரை கொம்பு. எனது பாலிவுட் முதல் படமும் ஹிட் ஆகவில்லை. எனவே எனக்கு அங்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தமிழ் சினிமா கொடுத்த அரவணைப்பு
ஆனால், எனக்கு தமிழில் அடுத்தடுத்து தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. என் வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்தினேன். இப்போது, எனது திறமையை பார்த்து பாலிவுட் திரையுலகமும் என்னை பயன்படுத்திக் கொள்கிறது.
தோல்வியை ஒப்புக்கொண்ட நடிகை
எனக்கு பாலிவுட்டில் சரிவர வாய்ப்பு கிடைக்காமல் போனதுதான் நான் பாலிவுட்டில் நடிக்காமல் போனதற்கான காரணம்." என்று தனது தோல்வி முகத்தை கூட மிகவும் வெளிப்படையாக அவர் தைரியமாக வெளிப்படுத்தி இருப்பது ஆச்சரியமாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: ஸ்ரீதேவி பக்கத்தில் இருக்கும் இந்த சிறுமி எந்த பிரபல நடிகை தெரியுமா.?