திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்ன.. இவரு உங்க பள்ளி கால ஹீரோவா?? சித்தி 2 அம்மா நடிகை பகிர்ந்த செல்பி! கூட யார்னு பார்த்தீங்களா!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் சித்தி 2. இந்த தொடரில் ஹீரோவான கவின் கதாபாத்திரத்தின் அம்மாவாக மல்லிகா என்ற ரோலில் நடித்து வருபவர் நடிகை மீரா கிருஷ்ணன். இவர் இந்த தொடரில் வில்லியாக நடித்து வருகிறார்.மேலும் மீரா கிருஷ்ணன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரிலும் ஹீரோவான தீபக்கிற்கு அம்மாவாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் அவர் அண்மையில் பிரபல நடிகரான ஸ்ரீகாந்தை சந்தித்துள்ளார். மேலும் அவருடன் எடுத்த செல்பியை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும், அதில் "என் பள்ளி மற்றும் கல்லூரி கால ஹீரோவை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி" என பதிவிட்டிருந்தார்.
அதனைக் கண்ட ரசிகர்கள் ஷாக்காகி உங்களுக்கு அவ்வளவு குறைந்த வயதுதான் ஆகிறதா? நீங்களும் 90ஸ் கிட்ஸ்தானா? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதால் வயது அதிகமானவர் என நினைக்கபடும் இவருக்கு 35 வயது இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.