அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
சந்தானத்துடன் கைக்கோர்த்த தனுஷ் பட நடிகை.! நீண்ட இடைவெளிக்கு பின் வாய்ப்பு.!
சின்னத்திரை லொள்ளு சபா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் நிறைய ரசிகர்களை பெற்று அதன் பின் நகைச்சுவை நடிகராக பட வாய்ப்பு கிடைக்கப்பெற்றவர் தான் நடிகர் சந்தானம். நிறைய படங்களில் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்த அவர் கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.
நகைச்சுவையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களில் அவர் ஹீரோவாக நடித்து வருகின்றார். ஹீரோவான பின்னர் அவருக்கு நிறைய முறை நகைச்சுவை கதாபாத்திரத்திற்கான வாய்ப்புகள் வந்தாலு,ம் அதை மறுத்துவிட்டு ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடித்துக் கொண்டு இருக்கிறார் சந்தானம்.
இந்நிலையில், அவர் அடுத்ததாக டிக்கிலோனா பட இயக்குனர் கார்த்திக் யோகியின் இயக்கத்தில் உருவாக உள்ள வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடிக்கின்றார்.
இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வரும் நிலையில் இதில் ஹீரோயினாக நடிகை மேகா ஆகாஷ் இணைந்துள்ளார். ஏற்கனவே, இவர் தனுஷ் படத்தின் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.