மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கடவுளே.. இப்படியுமொரு நோயா?? வித்தியாசமான ஹார்மோன் பிரச்சினையால் சிரமப்படும் நடிகை ரச்சிதா.!
தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருக்கக்கூடியவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ரச்சிதா சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சியாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தார். அவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
தொடர்ந்து சில தொடர்களில் நடித்த அவர் பிரிவோம் சந்திப்போம் தொடரில் தன்னுடன் நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகிய ஜோடியாக வாழ்ந்து வந்த இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்ட நிலையில் தற்போது ரச்சிதா, தினேஷ் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் நடிகை ரச்சிதா பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டு ட்ரெண்டானார்.
இந்நிலையில் அவருக்கு வித்தியாசமான அரிய வகை நோய் ஏற்பட்டுள்ளதாம். அதாவது நடிகை ரச்சிதாவிற்கு உணவை நுகர்ந்து பார்த்தாலே உடல் எடை அதிகரித்து விடுமாம். அத்தகைய ஹார்மோன் பிரச்சினை அவருக்கு உள்ளதாம். சமீபத்தில் மருத்துவரை அணுகியபோதுதான் தனக்கு இத்தகைய பிரச்சினை இருப்பதாக தெரிய வந்ததாகவும், அதனால் தான் ஆரோக்கியமான உணவு முறைகள் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை ரச்சிதா கூறியுள்ளார்.