அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
நடிகை ராதிகாவுக்கு கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்.! என்ன விசேஷம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா. முதல் படத்திலேயே சிறப்பாக தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய அவர் அதனைத் தொடர்ந்து ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
மேலும் வெள்ளிதிரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் களமிறங்கிய அவர் சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, வாணி ராணி, சந்திரகுமாரி, சித்தி-2 என தொடர்ந்து பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். அவர் தற்போதும் பல பிரபலங்களின் படங்களில் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துவரும் ‘அருண் விஜய் 33’ படத்தில் ராதிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை ராதிகா சரத்குமார் சினிமாத்துறைக்கு வந்து 43 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி, ‘அருண் விஜய் 33’ படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் படக்குழுவினர்.
அப்போது இயக்குனர் ஹரி, அருண்விஜய், தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், இணை தயாரிப்பாளர் ஜி.அருண்குமார், ஒளிப்பதிவாளர் கோபிநாத், யோகிபாபு, ராஜேஷ், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி மற்றும் அனைவரும் வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.