மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எனக்கு கல்யாணமா?.. 2020-லேயே காதல் முறிந்துவிட்டது., கல்யாணம் நடக்குமானு கூட தெரியல - நடிகை ரெஜினா ஓபன்டாக்..!!
தமிழில் விமல் & சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் ரெஜினா காசான்ரா. இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் இருந்து வருகிறார்.
இவரின் கைவசத்தில் 3 தமிழ் படமும், 3 தெலுங்கு படமும் உள்ளது. இவர் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. மேலும், பல்வேறு வதந்திகளும் பரவின.
இந்நிலையில், திருமணம் தொடர்பான செய்திக்கு மறுப்பு தெரிவித்து நடிகை அளித்த பேட்டியில், "கடந்த 2020-ல் எனது காதல் முறிந்தது. அதில் இருந்து வெளியேற சில நாட்கள் எடுத்துக்கொண்டன்.
தற்போதைய நிலையில் நான் யாரையும் காதலிக்கவில்லை. திருமணம் தொடர்பாகவும் பேசவில்லை. எனது வாழ்க்கையில் திருமணம் நடக்குமா? இல்லையா? என்பது கூட எனக்கு தெரியாது.
ஏனெனில் எனது அம்மா சுயமாக வாழ்வது குறித்து சிறுவயதில் இருந்தே என்னை பழக்கப்படுத்திவிட்டார். அதனால் எனது வாழ்க்கையில் யாராவது வேண்டும் அல்லது வேண்டாம் என யோசிக்க மாட்டேன்" என்று தெரிவித்தார்.