மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"தலைவர் 170 படத்திற்காக கடுமையான உடற்பயிற்சியில் இறுதிச்சுற்று நடிகை!" வீடியோ வைரல்!
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிப்படங்களில் நடித்து வருபவர் ரித்திகா சிங். 2002ம் ஆண்டு வெளியான "டார்ஸான் கி பேட்டி" என்ற ஹிந்திப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழில் 2016ம் ஆண்டு "இறுதிச்சுற்று" படத்தில் நடித்திருந்தார்.
மேலும் இறுதிச்சுற்று படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது, தேசிய விருது உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார் ரித்திகா சிங். மேலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, நடிக்க வாய்ப்புள்ள கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
கடைசியாக விஜய் ஆண்டனி ஜோடியாக "கொலை" திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை என்றாலும், ரித்திகாவின் கதாபாத்திரம் பெருமளவில் பேசப்பட்டது. இந்நிலையில் இவர் தற்போது "தலைவர் 170" படத்திலும் நடித்து வருகிறார்.
த. செ. ஞானவேல் இயக்கி வரும் படத்தில் ரஜினிகாந்துடன் ரித்திகா சிங் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் ரித்திகா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.