#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அந்த இடத்திலேயே கேமிராவை வைத்தார்கள்! ஆபாசமாக படம் எடுத்தார்கள்! நடிகை கதறல்!
தமிழின் முன்னணி நடிகையாக வலம் வரும் நிக்கி கல்ராணியின் சகோதரியும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சஞ்சனா கல்ராணி. பதினோராம் வகுப்பு படிக்கும் போதே நடிக்க வந்துவிட்டார் சஞ்சனா.
இவர் நடித்த முதல் திரைப்படமான கண்டாஹெண்டதியின் இயக்குநர் ரவி ஸ்ரீவட்சவா, தன்னை கட்டாயப்படுத்தி ஆபாச காட்சிகளில் நடிக்க வைத்ததாக குற்றம் சுமத்தியுள்ளார் சஞ்சனா.
இதுகுறித்து சஞ்சனா கல்ராணி கூறியதாவது :
"கண்டாஹெண்டதி படத்தின் இயக்குநர் ரவி ஸ்ரீவட்சவா, என்னிடம் அப்படத்தின் கதையை கூறினார். படத்தில் அதிகம் ஆபாசம் இருப்பதாக தோன்றியதால் நான் நடிக்க மறுத்துவிட்டேன். பின்னர் கதையில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளதாகவும், ஆபாச காட்சிகள் இல்லை ஆனால் ஒரே ஒரு முத்த காட்சியில் மட்டும் நடிக்க வேண்டும் என இயக்கலானார் கூறினார்.
நான் அதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் பாஹாங்கில் நடைபெறும் என தெரிவித்தனர். அதனால் படப்பிடிப்பிற்கு நான் ஏன் அம்மாவை அழைத்துவருவேன் என கூறினேன். அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் அம்மாவை படப்பிடிப்பு தளத்திற்கு வர அனுமதிக்கவில்லை.
மேலும் படப்பிடிப்பின் போது தன்னிடம் ஒரேயொரு முத்தக்காட்சி என்று கூறிவிட்டு
பல முத்தக் காட்சிகளை படத்தில் சேர்த்தார்கள். 50 முறை முத்தக்காட்சிகளில் நடிக்க வைத்தார்கள். மேலும் என் மார்பு பகுதி, கால்களை ஆபாசமான வகையில் படம் எடுத்தார்கள். கேமராவை அந்த பகுதிகளிலேயே காட்டினார்கள்.
இப்படி எல்லாம் செய்யாதீர்கள் என நான் எதிர்ப்பு தெரிவித்த போது, நாங்கள் சொல்லும்படி எல்லாம் செய்யவில்லை என்றால் உன் கெரியரை நாசமாக்கிவிடுவோம் என இயக்குநர் மிரட்டினார். கனவுகளுடன் வந்த சின்னப் பெண்ணை அவர்கள் தங்கள் இஷ்டத்திற்குப் பயன் படுத்திவிட்டார்கள்" என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.