#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் அர்ஜுன் மீது #MeToo வில் பாலியல் புகார்! உண்மையிலேயே நடந்தது என்ன? முழுவிவரம் இதோ!
நடிகர் அர்ஜுன் தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கன்னட நடிகை ஒருவர் மீ டூவில் புகார் தெரிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நாடு முழுவதும் பெண்கள் பலர் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் புகார்கள் பற்றி #MeToo என்ற வார்த்தை மூலம் பகிர்ந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில் கன்னட நடிகை ஸ்ருதி என்பவர் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் படப்பிடிப்பின் போது அத்துமீறி நடந்து கொண்டதாக மீ டூவில் கூறியுள்ளார். ஸ்ருதி ஹரிஹரன் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கருத்தில், “மீடூ இயக்கம் எங்களுக்கு சுதந்திரமாக பேசுவதற்கு தகுந்த சூழலை உருவாக்கியுள்ளது. பாலியல் புகார்களை முன் வந்து சொல்வதற்கு தைரியம் தந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் அர்ஜுன் பற்றி கூறுகையில் நடிகர் அர்ஜுன் உடன் இருமொழியில் தயாராகும் படமொன்றில் நடித்துக்கொண்டிருந்த போதுதான் இந்த சம்பவம் நடந்து என்று தெரிவித்துள்ளார்.
எனக்கு நடிகர் அர்ஜுன் என்றால் மிகவும் பிடிக்கும், அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் ஆனால் இந்த சம்பவத்தால் நான் மிகவும் வேதனை அடைந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இது பற்றி அவர் கூறுகையில் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்கள் இயல்பாகவே சென்றது. படத்தில் அவருடைய மனைவியாக நடத்தேன். எங்களுக்கு இடையே ஒரு ரொமாண்டிக் காட்சி ஒருநாள் படமாக்கப்பட்டது. ஒரு நீண்ட வசனம் பேசிய பிறகு, இருவரும் கட்டிப் பிடிக்க வேண்டியிருந்தது.
அப்போது ஒத்திகையின் போது, நாங்கள் எங்கள் வசனங்களை பேசிப் பார்த்தோம். அர்ஜுன் என்னை கட்டிப்பிடித்தார். முன்கூட்டியே எதுவும் சொல்லாமலே, என்னுடைய அனுமதி இல்லாமல், கட்டிப்பிடித்தவாறு என் முதுகில் அவருடைய கைகளால் மேலும், கீழும் தடவினார். என் உடலோடு மிகவும் நெருக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டார்.
இதை சற்றும் எதிர்பாராத நான் இது பற்றி படத்தின் இயக்குனரிடம் இப்படி ஒரு காட்சி இருக்கிறதா என கேட்டேன். ஆனால் இயக்குனர் அதற்கு பதில் எதுவம் கூறவில்லை. சினிமாவில் இதெல்லாம் எதார்த்தம் என்பதை உணர்ந்துகொண்டேன். மேலும் இந்த சமபவம் பற்றி யாரிடமும் நான் சொல்லவில்லை மேக்கப் அறையில் மட்டும் கூறினேன். மேலும் இந்த சம்பவம் நடக்கும்போது சுமார் 50 உடனிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் பற்றி நடிகர் அர்ஜுன் கூறுகையில் பல ஆண்டுகளாக நான் சினிமா துறையில் இருக்கிறேன். 60 முதல் 70 நடிகைகளுடன் நடித்துள்ளேன். ஒருவரும் இதுபோன்ற புகாரை கூறியதில்லை. அவர்கள் என்னை மதிக்கிறார்கள். இன்றும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்” என்றார் அர்ஜுன்.