#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆட்டோவில் வைத்து நடிகை சுனைனா பாலியல் பலாத்காரம்! ஆட்டோ ஓட்டுனரை தேடும் பணி தீவிரம்!
காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் வந்தது. கடைசியாக நடிகர் விஜய் நடித்த தெறி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் நடிகை சுனைனா.
இந்நிலையில் இணையதள செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நடிகை சுனைனா பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் மீ டூ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தனக்கு ஏற்பட்ட மீ டூ அனுபவங்களை நடிகை சுனைனா விரிவாக பேசியுள்ளார்.
அந்த பேட்டியில் சுனைனா கூறியதாவது: நான் அப்போது ஏழாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் சுமார் 12 வயது இருக்கும். பெரும்பாலும் பள்ளிக்கு ஆட்டோவில்தான் செல்வேன். அவ்வாறு செல்லும்போது ஆட்டோ டிரைவர் பக்கத்தில் யார் அமர்வது என்று எங்களுக்குள் போட்டி இருக்கும். பெரும்பாலும் அந்த ஆட்டோ ஓட்டுநர் என்னைத்தான் அவர் பக்கத்தில் அமர வைப்பார்.
அவர் அருகில் அமர்வதை நானும் பெருமையாக நினைத்தேன். அப்போது அவர் எண்னிடம் பாலியல் சீண்டல்களை செய்தார். நானும் அவர் என்ன செய்கிறார் என்பது தெரியாமளையே சுமார் நான்கு வருடங்கள் அவர் ஆட்டோவில் சென்றேன். நான் 10 ஆம் படிக்கும்போதுதான் அவர் என்ன செய்கிறார் என்பதை உணர்ந்தேன்.
அன்று முதல் எனக்கு அந்த ஆட்டோ ஓட்டுனர் மீது கடும் கோபம் இருந்தது. எனக்கு நேர்ந்த அவலத்தை நான் என் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் தற்போது அந்த ஆட்டோ ஓட்டுனரை தேடிக் கொண்டிருக்கிறேன். அவன் காலரை பிடித்து என்னை ஏன் அப்படி செய்தாய் என்று கேட்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறேன்.