ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
தற்கொலை செய்து கொள்ள நினைத்த மணிரத்தினம் படம் நடிகை.! அவரே பகிர்ந்த தகவல்.!
கோலிவுட் சின்னத்திரையில் முக்கிய தொகுப்பாளினியாக இருந்தவர் நடிகை ஸ்வர்ணமால்யா. இளமை புதுமை நிகழ்ச்சியின் மூலம் இவர் 90'S கிட்ஸ்களின் விருப்பமான தொகுப்பாலினியாக இவர் இருந்தார். அதன் பின்னர் குடும்பத்திரை, கலக்கப்போவது யாரு சீசன் 2, அன்புள்ள சிநேகிதி மற்றும் நிம்மதி உங்கள் சாய்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அவர் தனிப்பட்ட முத்திரை பதித்தார்.
இது மட்டுமல்லாமல் வெள்ளி திரைகளும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தில் பூரணி கதாபாத்திரத்தில் நடித்த இவர் எங்கள் அண்ணா படத்தில் நடித்திருந்தார்.
மேலும் மொழி திரைப்படத்தில் ஜோதிகாவுக்கு தோழியாக நடித்து தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளிலும் முத்திரை பதித்தார். இந்த நிலையில் சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை ஸ்வர்ணமால்யா பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் தனது திருமண வாழ்வின் சங்கடங்கள் குறித்தும் தெரிவித்துள்ளார்.
அதாவது, "எனக்கு 21 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த சிறு வயதில் திருமணம் ஆகி எனக்கு விவாகரத்தும் நிகழ்ந்து விட்டது. எனக்கு ஏன் விவாகரத்து நடந்தது என்பது குறித்து இப்போது வரை புரியவில்லை. இந்த விவாகரத்து என்னை விட என் பெற்றோர்களை மிகவும் பாதித்தது. இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன்." என்று தெரிவித்துள்ளார்