மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடு கடலில் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் நடிகர் அஜித்.. வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் ஆச்சரியம்.!
தமிழ் திரை துறையில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜித். இவர் சினிமாவில் நுழைய ஆரம்ப காலகட்டத்தில் பல சவால்களை சந்தித்து இருந்தாலும் தற்போது தனது நடிப்பு திறமையின் மூலம் அல்டிமேட் ஸ்டார் என்றும் தல என்றும் பெயர் பெற்றுள்ளார்.
இவ்வாறு 90களின் ஆரம்ப காலங்களில் இருந்து தற்போது வரை தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் அஜித். மேலும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியிருக்கிறார்.
இதன்படி சினிமாவில் பிஸியான நடிகராக இருந்து வரும் அஜித் சமீபத்தில் 'துணிவு' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து தற்போது 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் பல முக்கிய பிரபலங்கள் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்தது. பல கட்ட சருக்கல்களை தாண்டி படப்பிடிப்பு நடைபெற்று இப்படம் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இது போன்ற நிலையில் தற்போது நடிகர் அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பிலிருந்து சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளார். இதன் காரணமாக குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகவும் மகளின் பிறந்தநாளிற்காகவும் ஓய்வு எடுத்துள்ளார் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படமும், மனைவியுடன் நடுக்கடலில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.