மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அசத்தல் தகவல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.
மேலும், இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும், வில்லன் கதாபாத்திரத்தில் ஆக்சன் கிங் அர்ஜுனன் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா மற்றும் ஆரவ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட் பிலிப்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் வேகமாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அஜித்தின் பிறந்தநாளையொட்டி மே 1ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.