மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்னொரு முறை கர்ப்பமா.? ஸ்ட்ரிக்ட்டா நோ சொன்ன ஆலியா மானசா.!
தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் திரைப்படத்தில் ஜோடியாக நடித்து, பின்னர் நிஜ வாழ்விலும் ஜோடியாக மாறிவிடுகிறார்கள். அந்த வகையில், பல ஜோடிகள் சின்னத்திரையிலும் ஜோடியாக நடித்து, பின்னர் நிஜ வாழ்வில் இணைவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, வெற்றி தொடரென பெயரெடுத்த ராஜா ராணி தொடரில் முதன்முதலாக ஜோடியாக நடித்த ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் உள்ளிட்ட இருவரும் முதலில் நட்பாக பழகி வந்த நிலையில், அதன் பிறகு அந்த பழக்கம் இருவருக்குமிடையில் காதலாக மாறியது. அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள், ஒரு மகன் என 2 குழந்தைகள் இருக்கின்றனர். ராஜா ராணி 2 தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோது ஆலியா மானசா கர்ப்பமாக இருந்ததால், திடீரென்று அவர் அந்த தொடரிலிருந்து வெளியேறினார். அதன் பிறகு தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற இனியா தொடரில் ஆலியா மானசா நடித்து வருகிறார்.
இத்தகைய சூழ்நிலையில் தான் எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கின்ற ஆலியா தன்னுடைய கணவர் சஞ்சீவுடன் அவ்வப்போது ரீல்ஸ் செய்து வெளியிடுவது வாடிக்கையானது. அந்த வகையில், தன்னுடைய கணவர் சஞ்சீவ் 3வது குழந்தைக்கு ஆசைப்படுவதை போன்ற ஒரு காமெடி ரீல்ஸை தற்போது வெளியிட்டிருக்கிறார்.