மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. ஆலியா மானசாதானா இது! துளி கூட மேக்கப் இல்லாம, அடையாளமே தெரியாம எப்படியிருக்காரு பார்த்தீர்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் ராஜாராணி. இந்த தொடரில் கார்த்தி மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா. இத்தொடரின் மூலம் இவர்களுக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
சீரியலில் கணவன், மனைவியாக நடித்த இருவரும் பின்னர் நிஜத்திலும் காதலித்த நிலையில், ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அழகிய ஜோடியாக வலம் வந்த அவர்களுக்கு தற்போது ஐலா என்ற அழகிய மகள் உள்ளார். குழந்தை பிறந்த பிறகு ஏராளமான தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஆலியா தனது உடல் எடையை குறித்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். மேலும் அவர் தற்போது விஜய் டிவியில் ராஜாராணி 2 சீரியலிலும் நடித்து வருகிறார்.
சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஆலியா அவ்வப்போது முழு மேக்கப்பில் வித்தியாசமான உடைகளில் தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் சமீபத்தில் வீட்டில் இருந்தபடி எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கிறார். அந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் ஆலியா வேறு யாரோ மாதிரி இருப்பதாக கூறி வருகின்றனர்.