மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் கர்ப்பம்! ராஜாராணி 2வில் இருந்து விலகுகிறாரா இந்த பிரபலம்? அவரே போட்டுடைத்த சீக்ரெட்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட்டான ராஜாராணி தொடரில் கார்த்தி மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா. இத்தொடரில் ஜோடியாக மக்கள் மனதை கவர்ந்த அவர்கள் நிஜத்திலும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த அழகிய தம்பதியினருக்கு ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.
மேலும் ஆலியா மானசா தற்போது விஜய் டிவியில் ராஜாராணி 2 தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சஞ்சீவ் சன் டிவியில் கயல் என்ற தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் சஞ்சீவ் மற்றும் ஆலியா இருவரும் அவ்வப்போது ரீல்ஸ் மற்றும் ஐலாவின் கியூட் வீடியோக்களை வெளியிடுவர்.
இந்நிலையில் ஆலியா தற்போது மீண்டும் இரண்டாவதாக கர்ப்பமாக உள்ளார். அதாவது அவர் 4 மாதம் கர்ப்பமாக உள்ளார். அதனை அவரே மிகவும் மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்தார். இதற்கிடையில் ஆலியா மானசா ராஜாராணி 2 தொடரில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் பரவியது. இதுகுறித்து விளக்கமளித்த ஆலியா தான் ராஜாராணி 2 தொடரில் இருந்து விலகப் போவதில்லை, அந்த செய்தி வதந்தி எனவும், அவர் நடிக்கும் காட்சிகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம் என இயக்குனர் பேசியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.