மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் வீட்டிற்குள் களமிறங்கும் இரு அழகிய பிரபலங்கள்.! வெளியான மாஸ் தகவலால் செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
பிக்பாஸ் சீசன்மூன்று கமல்ஹாசன் தொகுத்து வழங்க மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மொத்தம் 16 பிரபலங்கள் போட்டியாளராக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்ஷி ஆகியோர் கடந்த நாட்களில் வெளியானர். அதனை தொடர்ந்து வைல்டுக்கு கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார்.
பின்னர் விருந்தினராக மற்றொரு போட்டியாளராக வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் வந்ததுமே பல பிரச்சினைகள் வெடித்து வீடே இரண்டானது. இந்நிலையில் கடந்த வாரம் அபிராமி குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறியநிலையில், தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்காக நடிகை மதுமிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், சாண்டி, கவின் சேரன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களில் யார் வெளியேற உள்ளனர் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில் தற்போது இருபிரபலங்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவர்களில் ஒருவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் செம்பாவாக ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான நடிகை ஆலியா மானசா எனவும் மற்றொருவர் அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய மாடல் பூர்ணிமா எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் இந்த புது என்ட்ரிக்காக பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.