அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
ஆடை படத்தின் புதிய போஸ்டர்! அலங்கோலமாக நிற்கும் அமலாபாலின் ஷாக் புகைப்படம்
இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் ஆடை. பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படத்தில், அமலா பால் உடன் இணைந்து பிஜிலி ரமேஷ், விவேக் பிரசன்னா ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
தமிழில் வேறு எந்த நடிகையும் இந்த அளவுக்கு கவர்ச்சியாக நடித்ததில்லை என்று பேசினார்கள். இந்தி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு ஆடை குறைப்பு செய்துள்ளதாகவும் விமர்சனங்கள் கிளம்பின. இந்த படத்தில் நடிப்பது குறித்து அமலாபால் கூறும்போது, “வித்தியாசமாக களம் கொண்ட உணர்வுப்பூர்வமான கதை. எனது கதாபாத்திரத்தை கேட்டபோது எனக்கு மிகவும் பிடித்திருத்தது. மேலும் இது எனக்கு ஒரு புதுமாதிரியான படமாக இருக்கும் என்றார்.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் வெளியான இந்தப் படத்தின் டீசரில் ஆடையில்லாத அமலாபால், பெண்களின் லிப் லாக் என பல அதிர்ச்சிகரமான காட்சிகள் இடம்பெற்றன. ஏற்கனவே இந்த படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆடை படம் நாளை 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதன் ப்ரோமசனுக்காக அமலாபால் ஒரு சிறிய நாடா வடிவிலான துணியை மட்டும் உடலில் சுற்றி நிற்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
1 more day to go. Can't handle the excitement! 🎉🎉🎉🎉🎉🎉🎉#Aadai #Aadaifromjuly19 #Aame #aadaifromtomorrow pic.twitter.com/sh9XtM6fyA
— Amala Paul ⭐️ (@Amala_ams) July 18, 2019