#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை அமலாபாலை ஒட்டி உரசிய பிரபல இயக்குனர்! உச்சத்தை தொடும் MeToo விவகாரம்!
நாளுக்குநாள் மீ டூ விவகாரம் பெரிதாகிவருகிறது. பல விதமான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது இந்த மீ டூ. குறிப்பாக தமிழ் சினிமாவில் மிகப் பெரிய பரபரப்பை கிளப்பி வருகிறது. பிரபல பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்துவாள் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் பற்றியும், அவருக்கு வரும் பாலியல் சம்மந்தமான செய்திகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் ஆவணப் பட இயக்குநர் லீனா மணிமேகலை, இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். ஆனால் தன்மீதான பாலியல் புகாரை மறுத்துள்ளார் சுசி கனேசன். மேலும் இதை நான் சட்ட ரீதியாக சந்திக்க தயார் எனவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் தற்போது இது குறித்து நடிகை அமலா பால் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திருட்டு பயலே 2 திரைப்படத்தில் நான் நடிக்கும் போது, சுசி கணேசனின் இரட்டை அர்த்த பேச்சுகள், தேவையே இல்லாமல் உரசிக் கொண்டு பேசும் சுபாவம் ஆகியவை தன்னை மிகுந்த சங்கடத்துக்கு ஆளாக்கியதாக அதில் குறிப்பிட்டிருக்கிறார்.