#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"அம்மன் படத்தில் நடித்த குழந்தையை நியாபகம் இருக்கா?! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?"
1995ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த படம் "அம்மொரு". கோடி ராமகிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, சுரேஷ், ராமி ரெட்டி, பேபி சுனைனா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் பாக்ஸ் ஆபீசில் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.
இதையடுத்து இந்தப் படம் தமிழில் "அம்மன்" என்ற பெயரில் ரிமேக் செய்யப்பட்டது. சுமார் 2கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டும் சுமார் 80 லட்சத்தில் எடுக்கப்பட்டது. 90'ஸ் கிட்ஸ்களுக்கு சாமி படம் என்றாலே "அம்மன்" திரைப்படம் தான் முதலில் நினைவுக்கு வரும்.
அந்தளவுக்கு இந்தப் படம் அனைவரையும் கவர்ந்தது. மேலும் இப்படத்தில் மொட்டை மந்திரவாதியாக நடித்த ராமி ரெட்டி "சண்டா" என்று அலறும்போது கூடவே சேர்ந்து பயத்தில் அலறியவர்களும் உண்டு. ரம்யாகிருஷ்ணன் அம்மன் கதாப்பாத்திரத்தில் நடித்த முதல் திரைப்படம் இதுதான்.
மேலும் குழந்தை அம்மனாக வந்து "பவானி" என்று அமைதியான குரலில் கூறும் அந்தக் குழந்தையையும் யாரும் மறந்திருக்க முடியாது. அவரது பெயர் சுனைனா. தற்போது திருமணமாகி கணவருடன் வசித்து வரும் இவர், அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.