மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் காதல்! புது காதலருடன் ரொமான்ஸ் செய்யும் எமி ஜாக்சன்! வைரல் புகைப்படங்கள்!!
தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராசப்பட்டிணம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து அவர் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி,2.O உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வெளிநாட்டு நடிகையான இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்டபல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் பிரிட்டனை சேர்ந்த ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால் திருமணம் நடைபெறுவதற்கு முன்பே இருவருக்கும் ஆண்குழந்தை பிறந்தது. பின்னர் அவர்களுக்கு திருமணம் நடைபெறவில்லை. எமி ஜாக்சன், ஜார்ஜ் பெனாய்டோ இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில் தற்போது எமி ஜாக்சன் மீண்டும் பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவருடன் காதலில் விழுந்ததாக தகவல்கள் பரவி வந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் எமி, எட் வெஸ்ட்விக்குடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருவரும் காதலித்து வருவதை உறுதி செய்துள்ளார்.