விஜய்யை மோசமாக கிண்டல் செய்தவர்களுக்கு, கடுமையான பதிலடி கொடுத்த பிகில் பிரபலம்!!



anand raj answered to netisan who tease vijay

அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து விஜய் நடித்துள்ள படம் பிகில். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25ம் தேதி வெளியானது.

    bigil movie

மேலும் சிலர் இப்படத்தை விமர்சனம் செய்திருந்தாலும், இப்படம் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஜயின் கெட்டப்பை கண்ட சிலர் தாத்தா, கிழவர் என கிண்டல் செய்து வந்தனர். 

இந்நிலையில் அவருக்கு பிரபல நடிகர் ஆனந்த்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.அவர் கூறுகையில், விஜய் என்ற ஒருவருக்காகவே மக்கள் தியேட்டருக்கு வந்து படத்தை பார்க்கின்றனர். பிகில் படத்தின் வெற்றிக்கு ஒரே காரணம் விஜய்தம்பி மட்டும்தான். உங்களுக்கு படம் பிடிக்கவில்லையென்றால் மொத்தமாக படத்தை விமர்சியுங்கள். சிலர் விஜய் தாத்தா ஆகிட்டார் என கிண்டல் செய்கின்றனர். இவ்வாறு தனிமனித விமர்சனம் செய்ய வேண்டாம். இதை நான் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் என கூறியுள்ளார்.