அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
தீயக பரவிய தகவல்.. அனிருத் - கீர்த்தி சுரேஷ் இருவருக்கும் விரைவில் திருமணம்.. உண்மை நிலவரம் என்ன?
கீர்த்தி சுரேஷ் - அனிருத் திருமண தகவல் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷின் பெற்றோர் விளக்கமளித்துள்ளனர்.
தென்னிந்தியா மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் என பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் கீர்த்தி சுரேஷ்.
தற்போது தமிழில் சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்திவரும் கீர்த்தி சுரேஷும், பிரபல இசை அமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. அனிருத்தின் பிறந்தநாளன்று கீர்த்தி சுரேஷ், அனிருத்துடன் நெருக்கமாக இருக்கும்படி எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த புகைப்படம்தான் அவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசு கிசு எழ முக்கிய காரணம். ஆனால் இந்த வதந்திக்கு ஏற்கனவே அனிருத், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக மீண்டும் தகவல் வெளியானது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் பெற்றோர் தரப்பில் இருந்து இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷ் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும், அவர் யாரையும் காதலிக்கவில்லை. இந்த தகவல் முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்பது தற்போது உறுதியாகியுள்ளது