#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அறந்தாங்கி நிஷாவிற்கு இப்படி ஒரு சோகமா! வெளியான வீடியோவால் சோகத்தில் ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் போன்ற பல்வேறு பிரபலங்கள் விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்கள். இதுபோன்ற பல்வேறு பிரபலங்களில் ஒருவர்தான் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அறந்தாங்கி நிஷா.
கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் அறந்தாங்கி நிஷா. மேடையில் இவர் செய்யும் காமெடி, வசனங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது சினிமா படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.
#Nisha pic.twitter.com/bg8GsIUVkD
— soosairaj (@SoosaiMca) August 23, 2019
இவர் சமீபத்தில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில், பாஜக குறித்தும், பிரதமர் மோடி, மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் குறித்தும் நிஷா மோசமான விமர்சனங்களை வைத்தார். இந்த விவகாரம் சர்ச்சை ஆனதை அடுத்து, தமிழிசை அக்காவை, எந்த ஒரு தவறான எண்ணத்திலும் பேசவேண்டும் என்று நினைத்தது கூட கிடையாது. இருந்தாலும் நான் பேசியது தவறுதான். இந்த ஒரு முறை மட்டும் என்னை மன்னித்துவிடுங்கள் இனிமேல் இவ்வாறு நடக்க வாய்ப்பே இல்லை என மன்னிப்பு கேட்டார்.
இதன்பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வடிவேலு காமெடியை போலவே, "நமது வாழ்க்கை எதை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது" என பேசியுள்ளார். இதனால் அறந்தாங்கி நிஷாவின் ரசிகர்கள் நிஷா அக்காவிற்கு எதோ பிரச்சனையோ என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.