ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
கமலின் மெகாஹிட் பாடலுக்கு அவரை போலவே நடனமாடிய இளைஞர்! வைரலான வீடியோவால் தேடிவந்த பட வாய்ப்பு!
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் அஷ்வின் குமார் என்பவர், டிரெட்மில் ஓடிக் கொண்டிருக்கும்போதே, அதில் நின்றவாறு கமலின் மெகாஹிட் பாடலான அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ பாடலுக்கு கமலைப் போலவே மிகவும் அசத்தலாக நடனமாடி இருந்தார்.
இந்த வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது பெருமளவில் வைரலானது. இந்நிலையில் இந்த நடனத்தை கண்ட நடிகர் கமல், அஷ்வின் குமாருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் வீடியோவை பார்த்து பெரும் ஆச்சரியம் அடைந்து அவரை பாராட்டி தள்ளியுள்ளார்.
Ashwin !!! I just realised!!! How are you doing?! What a talent man!!!!oh my!!! https://t.co/xLWIhfzFVr
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) July 6, 2020
மேலும் இந்த வீடியோவை பார்க்கும் பொழுது, நம்மிடம் இருக்கும் பயன்படுத்தப்படாத திறமைகளை பற்றி யோசிக்கிறேன். கண்டிப்பாக எனது அடுத்த படத்தில் நீங்கள் இருப்பீர்கள் எனவும் அவர் பதிவிட்டுள்ளார். இதனைக்கண்ட அஷ்வின் குமார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவித்திருந்தார். மேலும் அதனை தொடர்ந்து அஷ்வின்குமாருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது. அஷ்வின் குமார் தமிழில் துருவங்கள் பதினாறு மற்றும் சில மலையாள படங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Ashwin, this video made me think about the unexploited talents we have! want you for my next directorial for sure 😍 #InshahAllah
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) July 6, 2020