மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தந்தையின் 2-வது திருமணத்தை தடுத்து நிறுத்தப்போராடும் மகள்.. நடக்கபோவது என்ன?.. பாக்கியலட்சுமி ப்ரோமோ வைரல்..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி பாக்கியலட்சுமி. இந்த தொடரில் கோபி தனது மனைவியான பாக்கியலட்சுமிக்கு துரோகம் செய்துவிட்டு, முன்னாள் காதலியான ராதிகாவை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி பாக்கியாவை விவாகரத்து செய்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதே திருமண நிகழ்ச்சியில்தான் பாக்யாவும் சமையல் செய்து வருகிறார். இறுதியாக இந்த உண்மை கோபிக்கு தெரியவரவே, பாக்யாவை உடனடியாக வெளியேற்றுங்கள் என்று கத்துகிறார்.
இருந்தபோதிலும் அதற்கான வாய்ப்பு இல்லாததால் பாக்யாவே அவர்களது திருமணத்திற்கும் சமையல் செய்கிறார். இந்நிலையில் இவர்கள் திருமணம் நடைபெறுமா? நடைபெறாதா? என்று ரசிகர்கள் காத்திருந்ததை தொடர்ந்து, இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் "பாக்யாவை தேடிச்சென்று கோபி திட்டிதீர்க்கிறார். அத்துடன் கோபியின் தந்தை, ஈஸ்வரி மற்றும் கோபியின் மகளிடம் சென்று இன்று தான் கோபிக்கு திருமணம் என்று கூறவே, மூவரும் ஆட்டோவில் சென்று திருமணத்தை நிறுத்த முயற்சிக்கின்றனர். தொடர்ந்து இவர்களுக்கு திருமணம் நடைபெறுமா?" என்ற கேள்வியுடன் இந்த வார ப்ரோமோ முடிவடைகிறது.