மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செழியன் - ஜெனிக்கு பிறக்கப்போகும் குழந்தை.. தாத்தாவான கோபி., கடுப்பில் ராதிகா..! பெரிய தாத்தாவோட அலம்பல் தாங்கல..!!
சின்னத்திரை ரசிகர்களால் அதிகளவு பார்வையாளரை கொண்ட நெடுந்தொடர்களில் சிறப்பு வாய்ந்தது பாக்கியலட்சுமி. இத்தொடரில் கோபி செய்த பல காரியங்களால் கணவனுக்கு சட்டபூர்வமான விவாகரத்து கொடுத்த பாக்கியலட்சுமி, தனித்தன்மையுடன் உயர்ந்து வருகிறார். தனது கணவரின் சவாலை தீர்க்கவும், அவர் அனைத்து பணிகளையும் செய்து வருகிறார்.
இதற்கிடையில் தனது முன்னாள் காதலியை கரம்பிடித்த கோபி, அவரிடம் சிக்கி சின்னாபின்னமாகும் நிலையில், பாக்கியலட்சுமி வீட்டார் ஒரு இன்பச்செய்தியை அளித்துள்ளனர். செழியனும் - ஜெனியும் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது ஜெனி கர்ப்பமாக இருப்பதாக தெரியவருகிறது. இந்த தகவலை அறிந்த குடும்பத்தினர் அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகின்றனர்.
அத்துடன் வீட்டிற்கு வெளியே வம்புக்கு குடிவந்த கோபியை கடுப்பேற்ற, நம்ம தாத்தாவோ எனக்கு பேரன் பிறக்கப்போகிறான். சிலர் பேரன், பேத்தி எடுக்கும் வயதில் புதுமாப்பிள்ளை போல திருமணம் செய்து உலாவி வருகிறார்கள் என்று கோபியையும் - ராதிகாவையும் சேர்ந்தவாறு வம்பு இழுக்கிறார். இதனால் இந்த வாரம் பாக்கியலட்சுமி தொடர் காமெடி கொண்ட விறுவிறுப்புடன் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.