மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIn : பிக்பாஸ் பாலாஜிக்கு திருமணம் முடிந்தது.! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்.!
பிரபல மாடலாக இருந்த பாலாஜி முருகதாஸ் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 4- ல் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானார். அந்த சீசனில் அவர் ஆரியுடன் சண்டை போட, மற்றும் சனம் செட்டி குறித்து கருத்து தெரிவிக்க என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இருப்பினும் மிகக் கூலாக அவை அனைத்தையும் அவர் கையாண்டார்.
அது மட்டுமல்லாமல் சக போட்டியாளரான ஷிவானி நாராயணனை காதலிப்பதாக கூறப்பட்டது. இது சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து சிவானியின் தாய் பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற போது ஷிவானியை சண்டையிட்டார். இப்படி சர்ச்சை மன்னனாக பாலாஜி வலம் வந்தாலும் கூட அவருக்கு என்று ரசிகைகளின் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. பிக் பாஸ் விட்டு வெளியில் வந்த பின்னர் அமைதியாக இருந்தவர் போட்டியில் வெளியான பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியாளரானார்.
சமீபத்தில் பாலாஜி முருகதாஸ் எஸ்.ஜி.எஸ் கிரியேட்டிவ் மீடியா தயாரிப்பில் வா வரலாம் வா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழாவில் தனது கடந்த காலம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.
அது என்னவென்றால் போன மாதம் தனக்கு திருமணமாகிவிட்டது என்றும் சாரி ஃபிரண்ட்ஸ் அதை உங்களிடம் சொல்ல மறந்துட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். இது உண்மையா அல்லது படப்பிடிப்பா என்று ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.