மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்த ஹீரோ.. குட்டி விக்ரமுடன் கொஞ்சி விளையாடிய பிக்பாஸ் ஜுலி! தீயாய் பரவும் வீடியோ!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் விக்ரம். ஜூன் 3ம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. விக்ரம் படத்தில் கமலுக்கு மகனாக காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ளார்.
மேலும் அவருக்கு ஜோடியாக ஸ்வஸ்திகா நடித்திருந்தார். அவர்களது குழந்தையாக குட்டி விக்ரமாக ஒரு வயது நிறையாத தர்ஷன் என்ற குழந்தை நடித்துள்ளது. மகனைப் பறிகொடுத்த நிலையில், கமல் குட்டி குழந்தை சுதர்ஷன் உடன் நடித்துள்ள காட்சிகள் அனைத்தும் மிகவும் எமோஷனலாகவும், அனைவரின் மனதை கொள்ளை கொள்ளும் வகையிலும் இருந்தது.
இந்த நிலையில், தியேட்டரில் விக்ரம் படம் பார்த்துக் கொண்டிருந்த போது பிக்பாஸ் ஜூலி அந்த தர்ஷன் குழந்தையை கண்டுள்ளார். மேலும் அதனுடன் கொஞ்சி விளையாடியுள்ளார். அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அழகு சமத்து குட்டி, அடுத்த ஹீரோ கன்ஃபார்ம் என பதிவிட்டு பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.