#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இலங்கை கடலில் ரச்சிதா செய்த செயல்.! வாயடைத்துபோன ரசிகர்கள்.?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிரபலமான சீரியல் 'சரவணன் மீனாட்சி'. இந்த சீரியலின் மூலம் பிரபலமானவர்தான் ரட்சிதா மகாலட்சுமி. இவர் முதன்முதலில் 'பிரிவோம் சந்திப்போம்' எனும் தொலைக்காட்சி தொடர் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார்.
கன்னட நடிகை ஆன ரட்சிதா மகாலட்சுமி, 'சரவணன் மீனாட்சி' தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தினை பிடித்தார். இதன்பின் ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் போன்ற தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ரட்சிதா மகாலட்சுமி போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். மேலும் ரட்சிதா மகாலட்சுமிக்கு திருமண வாழ்க்கை சரியில்லாத காரணத்தால் விவாகரத்து ஆகிவிட்டது என்று திரைத்துறையில் கிசுகிசுத்து வருகின்றனர்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரட்சிதா, அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இலங்கைக்கு சுற்றுலா சென்ற ரக்ஷிதா அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.