அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
சிவப்பு நிற உடையில் கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்த பிக் பாஸ் நடிகை... சில்லறையை சிதறவிட்ட ரசிகர்கள்..! வைரலாகும் புகைப்படம்..!
பிக் பாஸ் மூலம் பிரபலமாகி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் ஷெரின். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் முக்கிய கதாபாத்திரங்களில் திரைப்படங்கள் நடித்திருக்கிறார். 2002 ஆம் வருடம் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதன் பிறகு விசில், பீமா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கவில்லை. 2008 ஆம் ஆண்டிற்கு பிறகு திரையில் தோன்றுவதற்கு இடைவெளி எடுத்துக் கொண்ட ஷெரின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு பெரிதளவில் வெற்றி கிடைத்தது.
விஜய் தொலைக்காட்சியில் 2019 ஆம் வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷெரின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியது. ஷெரின் ஆங்கிலம் பேசும் அழகை ரசிப்பதற்கே பல ரசிகர்கள் இருக்கின்றனர்.
இத்தகைய நிலையில் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷெரின் காதலர் தினத்தை முன்னிட்டு சிவப்பு நிற உடையில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.