96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மூட்டைமுடிச்சுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் கூல் சுரேஷ்.! என்னதான் நடந்தது?? வெளியான பரபரப்பு வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் ஏழாவது சீசன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அவர்களில் முதல் வாரத்தில் அனன்யா ராவ் எலிமினேட் ஆனார். அவரைத் தொடர்ந்து பாவா செல்லத்துரை தானாகவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் விஜய் மற்றும் கடந்த வாரம் யுகேந்திரன் மற்றும் வினுஷா ஆகியோர் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டனர். மேலும் நடிகர் தினேஷ், விஜே அர்ச்சனா, பிராவோ, கானா பாலா, அன்ன பாரதி ஆகியோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் போட்டியாளர்கள் தலையில் மணி கட்டப்பட்டு, அசையாமல் இருக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில் பிரதீப் மற்றும் கூல் சுரேஷ்க்கு இடையே வாக்குவாதம் ஏற்படவே, இதனால் கடுப்பான அவர் நான் வீட்டை விட்டு செல்கிறேன் என பெட்டியை தூக்கிகொண்டு கிளம்புகிறார். இது வைரலாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.