மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
BiggBoss Tamil: முதல் நாளே சம்பவத்தை ஆரம்பித்த பிக் பாஸ்: அதிர்ச்சியில் போட்டியாளர்கள்..! முதல் ப்ரோமோ வீடியோ உள்ளே.!
விஜய் தொலைக்காட்சியில் அடுத்த 105 நாட்களுக்கு இரவு 09 மணிக்கு மேல் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது ஏழாவது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. நேற்று நடிகர் கமல்ஹாசன் 18 போட்டியாளர்களை வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.
அதன்படி, தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் ஐஷு, அக்ஷயா, அனன்யா ராவ், பாவா செல்லதுரை, கூல் சுரேஷ், ஜோதிகா விஜயகுமார், மணிச்சந்திரா, மாயகிருஷ்ணன், நிக்ஸன், பூர்ணிமா ரவி, பிரதீபா ஆண்டனி, ரவீனா தாகா, சரவணன் விக்ரம், விசித்ரா, விஜய் வர்மா, வனிஷா தேவி, விஷ்ணு விஜய், யுகேந்திரன் ஆகியோர் இருக்கின்றனர்.
நேற்று முதல் நாளை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு, கேப்டன்சி தொடர்பான டாஸ்க்கும் நடைபெற்றது. இறுதியில் கடைசி போட்டியாளராக வந்த விஜய் வர்மா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்..
அதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் போட்டியாளர்கள் இரண்டு நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர்களுக்கான கட்டுப்பாடுகளை பிக் பாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பான முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது.
அதில், கேப்டன் 6 பேர் கொண்ட குழுக்களை பிரித்து, அவர்களுக்கு வழங்கப்படும் வேலைகள் தொடர்பாக எடுத்துரைக்கிறார். இதனைக்கேட்கும் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.