திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிகில் படம் வெளியாகும் தியேட்டர் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி புதிய ட்வீட் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'பிகில்'. இந்த படத்தை மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்து அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் பிகில் படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சிங்கப்பெண்ணே பாடலும் வெளியாகி இணையத்தில் மாஸ் காட்டியது.
இந்நிலையில் தற்போது பிகில் படம் ரிலீஸாகும் தியேட்டர் குறித்து புதிய தகவல் ஒன்றை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார். அதாவது தமிழ் நாட்டில் மிக அதிக தியேட்டர்களில் வெளியிடு என கூறியுள்ளார்.
#BigilDeepavali @Screensceneoffl will be releasing #Bigil in a record number of screens across TN 🔥🔥 #ExpectTheUnexpected #WillBreakAllRecords #TimeToSetNewOnes https://t.co/BzREd9ZXP0
— Archana Kalpathi (@archanakalpathi) August 28, 2019